தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெற்றன.


இந்நிலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் சற்று முன்னர் இந்து சமய முறைப்படி இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது.


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 26 ஆம் திகதி காலமானார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள், சமூக அமைப்புகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.  தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. Reviewed by ADMIN on May 31, 2020 Rating: 5