இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இடம்பெற்ற திருப்பம்!


இலங்கையில் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, காணொளி தொழில்நுட்பத்தில் வழக்குகள் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை முன்னெடுக்கும் செயற்பாட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் நேற்றையதினம் அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

நீதவான் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலையை தொடர்புப்படுத்தி விசாரணை இதன் கீழ் இடம்பெற்றது.

இந்நிலையில், விசேட மென் பொருள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணையின் போது சிறைச்சாலை கைதிகளை நீதி மன்றத்திற்கு அழைத்துவராது, அதற்குப்பதிலாக வெலிக்கடை சிறைச்சாலையில் ஸ்தாபிக்கப்பட்ட தொழில்நுட்ப பகுதியில் இருந்து கைதிகள் நீதிமன்றில் ஆஜார்படுத்தப்பட்டனர்.

மேலும் இந்த தொழில்நுட்ப நீதிமன்ற நடவடிக்கையை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இடம்பெற்ற திருப்பம்!  இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இடம்பெற்ற திருப்பம்! Reviewed by ADMIN on May 21, 2020 Rating: 5