இலங்கைக்கு மீண்டும் வந்த மிகப்பெரிய சோதனை : ஒருவர் பலி : பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!!
இலங்கையில் நிலவும் அடைமழையுடன் கூடிய காலநிலை காரணமாக வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, காலி, களுத்துறை உட்பட பல இடங்களில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ள நீர் நிரம்பாத வகையில் குளங்கள் தடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆபத்தான பகுதிகளுக்கு மேலதிகமாக படையினர் ஈடுபடுத்தள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


அனர்த்த நிலைமைகளின் புதிய தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு மீண்டும் வந்த மிகப்பெரிய சோதனை : ஒருவர் பலி : பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!!  இலங்கைக்கு மீண்டும் வந்த மிகப்பெரிய சோதனை : ஒருவர் பலி : பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!! Reviewed by ADMIN on May 16, 2020 Rating: 5