றிசாத் பதியுதீனை கைதுசெய்து மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் - ஞானசார தேரர்
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


முன்னளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவை மட்டுமன்றி ரிசாட்டையும் கைது செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவிச் செல்வதற்கும், அடிப்படைவாதிகளுக்கு அரசியல் அடைக்கலம் வழங்கவும் ரிசாட் பதியூதின் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.


ரிசாட்டை கைது செய்யாமை நாட்டு மக்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


ரிசாட்டை கைது செய்து மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
றிசாத் பதியுதீனை கைதுசெய்து மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் - ஞானசார தேரர் றிசாத் பதியுதீனை கைதுசெய்து மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் - ஞானசார தேரர் Reviewed by ADMIN on May 15, 2020 Rating: 5