அடையாள அட்டை எண் நடைமுறை செவ்வாய் முதல் நீக்கம் !!


நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் மாத்திரம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 900க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று இரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது, நாளை மறுதினம் 26 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட உள்ளது.
அத்துடன், எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல், நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊடரங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய, 26 ஆம் திகதி முதல் மறுஅறிவித்தல் வரை அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, மே 26 ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படும்.
அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த, அடையாள அட்டை இறுதி இலக்கத்தைப் பின்பற்றி அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபடும் முறைமை இனி பின்பற்றப்படாது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை வழமையான முறையில் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் பின்பற்றுவது அத்தியாவசியமானதாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடையாள அட்டை எண் நடைமுறை செவ்வாய் முதல் நீக்கம் !!  அடையாள அட்டை எண் நடைமுறை செவ்வாய் முதல் நீக்கம் !! Reviewed by ADMIN on May 24, 2020 Rating: 5