கிண்ணியாவில் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயதுச் சிறுவன் வபாத்.எப்.முபாரக் 

திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது சகோதரர் காயமடைந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா, ஆலீம் வீதியைச் சேர்ந்த எம். எப். முகம்மது ஷான் கனி (வயது -4) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

கலியினால் கட்டப்பட்டிருந்த பழைய வீட்டை சிறுவன் தட்டிக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்துள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி கே. டி. நெஹ்மத்துல்லாஹ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரண்டு வயதுடைய எம். எப். எம். அப்லத் என்ற சிறுவன் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிண்ணியாவில் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயதுச் சிறுவன் வபாத். கிண்ணியாவில் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயதுச் சிறுவன் வபாத். Reviewed by ADMIN on May 10, 2020 Rating: 5