வாயினுள் துணியை அடைந்து கை கால்களை கட்டி எரித்துக் கொலை செய்யப்பட்ட தமிழ் சிறுமி!


திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் 15 வயதுச் சிறுமி ஒருவரது வாயில் துணையை வைத்து அடைத்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10ஆம் வகுப்பு படித்து வரும் ஜெயபால் என்பவரின் மகளாக 15 வயதுடைய ஜெயஸ்ரீ என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

“வீட்டில் தனியாக இருந்த என்னை முருகன், கலியபெருமாள் 2 பேரும் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, பெற்றோலும் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றதாக” ஜெயஸ்ரீ வாக்குடூலம் வழங்கியுள்ளார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கலியபெருமாளை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி ஜெயஸ்ரீயின் பெற்றோர் சொல்லும்போது,

“எங்களுக்கும் அந்த 2 பேருக்கும் ஏற்கனவே பகை இருக்கிறது.. ஒருமுறை என் மகனைகூட அவர்கள் தாக்கிவிட்டனர்.. அவனை மீட்டு இதேபோல சிகிச்சை தந்து வருகிறோம். மகனை தாக்கிய இவர்கள் மீது புகார் தர போயிருந்தோம்.. அந்த ஆத்திரத்தில்தான் மகளை இப்படி தீ வைத்து வைத்து எரித்து விட்டனர்.. அவர்களை சும்மா விடக்கூடாது” என்று கதறி அழுதனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 95 சதவீதம் உடம்பெல்லாம் தீக்காயம் அடைந்த நிலையில்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிறுமியின் மரணம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் கொலை வழக்காக இதை மாற்றி விசாரணை நடைபெறக்கூடும்.

சிறுமி தந்த அந்த வாக்குமூலம்தான் வழக்கில் மிகப்பெரிய திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வாயினுள் துணியை அடைந்து கை கால்களை கட்டி எரித்துக் கொலை செய்யப்பட்ட தமிழ் சிறுமி!  வாயினுள் துணியை அடைந்து கை கால்களை கட்டி எரித்துக் கொலை செய்யப்பட்ட தமிழ் சிறுமி! Reviewed by ADMIN on May 12, 2020 Rating: 5