இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் டூ வேய் சடலமாக மீட்பு..இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் டூ வேய் (Du Wei) இன்று ஞாயிற்றுக்கிழமை -17- காலை இஸ்ரேலிய நகரான ஹெர்ஸ்லியாவில் உள்ள அவரது வீட்டியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென சீனாவின் வெளியுறவு அமைச்சக அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

டூ வேய் தனது 57 ஆவது வயதில் அவரது, படுக்கையில் உயிரிழந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ள அமைச்சரகம் உயிரிழப்புக்கான காரணத்தையும் இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

எனினும் இஸ்ரேலின் சேனல் 12 டி.வி, பெயரிடப்படாத மருத்துவ ஆதாரங்களை மேற்கோள் காட்டி, டூ வேய் தூக்கத்திலிருந்து இயற்கை மரணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது அவரது வீட்டில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக உக்ரைனுக்கான சீனாவின் தூதராக பணியாற்றிய டூ வேய், பெப்ரவரியில் இஸ்ரேல் தூதராக நியமிக்கப்பட்டார்.

டூ வேய் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தி ஜெருசலேம் போஸ்ட் இணையத்தளத்திற்காக சீன மற்றும் இஸ்ரேலிய மக்களின் பின்னடைவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் டூ வேய் சடலமாக மீட்பு..  இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் டூ வேய் சடலமாக மீட்பு.. Reviewed by ADMIN on May 17, 2020 Rating: 5