மாத்தறையில் பெண் ஒருவர் திடீர் மரணம் ! அடக்கம் செய்ய தடைவிதித்த பொலிஸார்மாத்தறை – வெலிகம புதியவீதியில் வசித்த முஸ்லிம் பெண் ஒருவர் இன்று காலை திடீரென மரணித்ததை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய பொலிஸார் தடை விதித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

54 வயதான குறித்த பெண் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலை தனியார் வைத்தியசாலைக்கு அவரது மகனால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இதன்போது அரச வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி தனியார் வைத்தியசாலை நிர்வாகம் அறிவுறுத்தியதை அடுத்து அவர்கள் மீண்டும் வீடுதிரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அதனைத்தடுத்த வெலிகம பொலிஸார், உடலை மரண விசாரணைக்காக மாத்தறை அரச வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.
மாத்தறையில் பெண் ஒருவர் திடீர் மரணம் ! அடக்கம் செய்ய தடைவிதித்த பொலிஸார்  மாத்தறையில் பெண் ஒருவர் திடீர் மரணம் ! அடக்கம் செய்ய தடைவிதித்த பொலிஸார் Reviewed by ADMIN on May 07, 2020 Rating: 5