கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிர் பிழைத்த 114 வயது முதியவர்


எத்தியோப்பியாவை சேர்ந்த 114 வயது முதியவர் ஒருவருக்கு பெப்ரவரி மாத இடைப்பகுதியில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் பாதிப்பில் இருந்து அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார்.
சீனாவின் வுஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகில் நுழையாத இடங்களே இல்லை. உலகம் முழுவதும் பரவி உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இவ்வைரஸ் ஆட்கொல்லி போன்றது என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 114 வயது தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளார்.
இந்த தகவலை எத்தியோப்பியா தலைநகரில் உள்ள ஒரு மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெப்ரவரி மாத இடைப்பகுதியில் மருத்துவமனையில் முதியவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் பூரணமாக குணமடைந்து நலமுடனும், நல்ல ஆயுளுடனும் உள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது . எத்தியோப்பியாவில் இதுவரை 5,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 75 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிர் பிழைத்த 114 வயது முதியவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிர் பிழைத்த 114 வயது முதியவர் Reviewed by ADMIN on June 25, 2020 Rating: 5