2011 உலகக்கிண்ணத்தை பணத்திற்காகவே இந்தியாவிற்கு விற்றோம்!


2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது, பணத்திற்காக கிண்ணம் தாரை வார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது இதனை தெரிவித்தார்.

“2011 உலகக் கோப்பை விற்றுவிட்டதாக நான் இன்று சொல்கிறேன். நான் இன்று இங்கே இருக்கிறேன். நான் பொறுப்புடன் சொல்கிறேன். இதை ஒரு நாடாக அம்பலப்படுத்த நான் விரும்பவில்லை.

அதாவது, 2011 அல்லது 2012, நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய ஆண்டு எனக்கு நினைவில் இல்லை. நாங்கள் பணத்திற்காக கோப்பையை தாரை வார்த்தோம்.

நான் அப்படித்தான் உணர்கிறேன். நான் அதை விவாதிக்க முடியும். நான் அதைப் பற்றி பேச முடியும். இது தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு பெரிய பேச்சு உள்ளது.

நான் இதில் விளையாட்டு வீரர்களை தொடர்புபடுத்த விரும்பவில்லை. ஏதோ ஒரு தரப்பு இதில் தொடர்புபட்டிருக்கலாம். நான் இது பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.”
2011 உலகக்கிண்ணத்தை பணத்திற்காகவே இந்தியாவிற்கு விற்றோம்! 2011 உலகக்கிண்ணத்தை பணத்திற்காகவே இந்தியாவிற்கு விற்றோம்! Reviewed by ADMIN on June 18, 2020 Rating: 5