8 ம் திகதி பள்ளிவாயல்களை திறப்பது தொடர்பில் புதிய சுற்று நிருபம் இன்று வெளியாகும் .


சுகாதார அமைச்சு மத ஸ்தானங்களை திறக்க வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி கொழும்பு கம்பஹா தவிர்ந்த நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களை 8 ம் திகதிக்கு திறக்க தீர்மானித்துள்ளதாக வக்பு சபை தலைவர் சட்டத்தரணி சப்ரி அலி குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டலின்படி தயாரிக்கப்பட்டுள்ள 10 வழிகாட்டல்கள் உள்ளடங்கிய புதிய வழிகாட்டல்கள் இன்று வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வக்பு சபையின் தீர்மானத்தை முஸ்லிம் சமய கலாசாரப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம் அஷ்ரபும் உறுதிப்படுத்தினார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கும், திறக்கப்படும் பள்ளிவாசல்கள் குறிப்பிட்ட தொழுகைக்கு 15 நிமிடத்துக்கு முன் திறக்கப்பட்டு 45 நிமிடத்துக்குள் மூடப்பட வேண்டும், கூட்டுத் தொழுகை நடாத்த அனுமதிக்கப்பட மாட்டாது. பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் 5 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.

பள்ளிவாசலில் ஒரு நுழைவாயில் மட்டுமே திறந்து வைக்கப்பட வேண்டும், பள்ளிவாசலில் மலசலகூடம், ஹவ்ல் என்பன பூட்டி வைக்கப்பட வேண்டும், காபட்டில் தொழுகை நடாத்தக் கூடாது, ஒரு மீற்றர் இடைவெளியைப் காட்டும் அடையாளங்கள் பள்ளிவாசலில் இடப்பட வேண்டும், சகலரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், தொழுகைக்காக வருவோர் முஸல்லாக்களை எடுத்து வர வேண்டும், பள்ளிவாசல்களில் கூட்டங்களை நடாத்துவதற்கோ, அன்னதானங்களை நடாத்துவதற்கோ அனுமதிக்கப்பட முடியாது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை உள்ளடக்கி வக்பு சபை தயாரித்திருக்கின்ற 10 நிபந்தனைகள் கொண்ட புதிய சுற்று நிரூபம் இன்று வெளியிடப்படும் என்றும் சப்றி அலி தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை ஜும்ஆ தொழுகை நடாத்த அனுமதிக்கப்படமாட்டாது.
8 ம் திகதி பள்ளிவாயல்களை திறப்பது தொடர்பில் புதிய சுற்று நிருபம் இன்று வெளியாகும் . 8 ம் திகதி பள்ளிவாயல்களை திறப்பது தொடர்பில் புதிய சுற்று நிருபம் இன்று வெளியாகும் . Reviewed by ADMIN on June 01, 2020 Rating: 5