இரண்டு வாரங்களில் மீண்டும் கொரோனா பரவலாம் - பொது சுகாதார சேவைகள் சங்கம் எச்சரிக்கை


கொரோனா வைரஸ் பாதுகப்பு சுகாதார கட்டுப்பாடு சட்டதிட்டங்களை கவனத்திற் கொள்ளாது மக்கள் அசட்டையாக செயற்படுவதால் இன்னும் இரண்டு வாரங்களில் வைரஸ் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண தெரிவித்துள்ளார்.


கொரோனா சுகாதார பாதுகாப்பு சட்டதிட்டங்களை அதிகாரிகள் கிரமமாக அமுல்படுத்தப் படாமையும் இதற்கு இன்னுமொரு காரணமென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.


பல இடங்களில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்கள் மீறப்படுவதாகவும், கொரோனா தொடர்பான அச்சம் மக்கள் மனங்களில் இருந்து நீங்கியுள்ளதாகவும் இது முறையல்லவென்றும் உப்புல் மேலும் தெரிவிக்கின்றார்.இரண்டு வாரங்களில் மீண்டும் கொரோனா பரவலாம் - பொது சுகாதார சேவைகள் சங்கம் எச்சரிக்கை இரண்டு வாரங்களில் மீண்டும் கொரோனா பரவலாம் - பொது சுகாதார சேவைகள் சங்கம் எச்சரிக்கை Reviewed by ADMIN on June 14, 2020 Rating: 5