திரிபோஷா உற்பத்தி தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது..


மக்காச் சோளம் கிடைக்காத காரணத்தினால் ஜா எல பகுதியில் உள்ள திரிபோஷா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அதில் பணியாற்றிய சுமார் 300 தொழிலாளர்கள் கடந்த 3 வாரங்களாக வேலையிழந்து வீட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களாக மக்காச் சோளம் இல்லாத காரணத்தால் திரிபோஷா உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இந்நிலை தொடருமானால் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திரிபோஷா உற்பத்தி தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.. திரிபோஷா உற்பத்தி தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.. Reviewed by ADMIN on June 01, 2020 Rating: 5