நிக/பண்ணவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் சுகாதார மற்றும் ஊடகப் பிரிவினரால் வழங்கப்படும் பாடசாலையை மீள ஆரம்பித்தல் பற்றிய விஷேட அறிவித்தல்(02.06.2020)

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் கடந்த 03 மாதங்களாக நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருப்பது சகலரும் அறிந்த விடயம். எனினும் இத்தொற்றுநோய்ப் பாதிப்பிற்குப் பிறகு கற்றல் செயற்பாடுகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் நோக்கில் பாடசாலைகளைக் கட்டம் கட்டமாக மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் முதல் கட்டமாக பாடசாலை வளாகம், வகுப்பறைகள், மைதானம் மற்றும் பாடசாலையின் சுற்றுப்புற சூழல் போன்றவற்றை முற்றுமுழுதாக சுத்தம் செய்து தொற்றுநீக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இச்சுத்திகரிப்பு வேலைகளை முழுமையாக செய்து முடிக்காமல் மாணவர்களைப் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு முழுமையாக தொற்றுநீக்கம் செய்யப்பட்டு முறையாக அனுமதி பெறாத பாடசாலைகள் எக்காரணம் கொண்டும் மீள ஆரம்பிக்க இடமளிக்கப்பட மாட்டாது. 

எனவே, இவ்வேலைத்திட்டத்தை முழுமையாக செய்து முடிப்பதற்காக வேண்டி சகல பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரை இணைத்து எதிர்வரும் 02 ஆம் 03 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் சிரமதானப் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
இதன்படி :

_02.06.2020 அதாவது நாளை செவ்வாய் கிழமை தரம் 10, 11, 12, 13 ஆகிய வகுப்பு மாணவர்களது பெற்றோர்களும்_

_03.06.2020 புதன்கிழமை தரம் 06, 07, 08, 09 ஆகிய வகுப்பு மாணவர்களது பெற்றோர்களும்_

_06.06.2020 சனிக்கிழமை தரம் 06, 07, 08, 09 ஆகிய வகுப்பு மாணவர்களது பெற்றோர்களும் பழைய மாணவர்களும்_ இச்சிரமதானப் பணியில் கட்டாயமாக கலந்துகொள்ளுமாறு பணிவாக வேண்டிக்கொள்கிறோம்.
சிரமதானப் பணிகளுக்காக வருபவர்கள் கத்தி, மண்வெட்டி, புல் வெட்டும் இயந்திரம், குப்பைவாரி, வீச்சுக்கத்தி, கூடை, வீல்பெரோ போன்ற உபகரணங்களுடன் வருமாறு கேட்டுக் கொ‌ள்கிறோம். 

பாடசாலையை மீள ஆரம்பித்து மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான இச்செயற்திட்டத்திற்கு சகல பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
நிக/பண்ணவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் சுகாதார மற்றும் ஊடகப் பிரிவினரால் வழங்கப்படும் பாடசாலையை மீள ஆரம்பித்தல் பற்றிய விஷேட அறிவித்தல் நிக/பண்ணவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் சுகாதார மற்றும் ஊடகப் பிரிவினரால் வழங்கப்படும் பாடசாலையை மீள ஆரம்பித்தல் பற்றிய விஷேட அறிவித்தல் Reviewed by ADMIN on June 01, 2020 Rating: 5