வாக்காளர்கள் நீல நிற பேனாக்களை எடுத்து வர வேண்டும் - மகிந்த தேசப்பிரியதேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் ஒத்திகை இன்று -07- அம்பலாங்கொடையில் நடைபெற்றது.


தேர்தல் ஒத்திகையின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த தேசப்பிரிய,

வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு வரும் போது கறுப்பு அல்லது நீல நிற பேனாக்களை வாக்காளர்கள் எடுத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் வாக்களிக்கும் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பாக வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக அனைத்து ஊடகங்களையும் அழைத்து விளக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்கள் நீல நிற பேனாக்களை எடுத்து வர வேண்டும் - மகிந்த தேசப்பிரிய வாக்காளர்கள் நீல நிற பேனாக்களை  எடுத்து வர வேண்டும் - மகிந்த தேசப்பிரிய Reviewed by ADMIN on June 07, 2020 Rating: 5