தேர்தல் அதிகாரிகள் தலையீடு; வெளியேறிய மைத்ரி!முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்த நிகழ்வொன்றுக்குள் சென்ற தேர்தல் அதிகாரிகள், குறித்த நிகழ்வு தேர்தல் சட்டத்துக்குப் புறம்பாக இடம்பெறுவதாகக் கூறி அவரை வெளியேறச் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலன்நறுவ மாவட்டத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை வழங்கி வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மைத்ரி கலந்து கொண்டிருந்த பொழுதே இன்று இவ்வாறு தேர்தல் அதிகாரிகள் அங்கு சென்று அவரை தடுத்துள்ளனர்.

இம்முறை பொதுத் தேர்தலில் குறித்த மாவட்டத்தில் மைத்ரிபால சிறிசேன போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அதிகாரிகள் தலையீடு; வெளியேறிய மைத்ரி!  தேர்தல் அதிகாரிகள் தலையீடு; வெளியேறிய மைத்ரி! Reviewed by ADMIN on June 15, 2020 Rating: 5