மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலயம் சமுர்த்தி சங்கங்களினால் சுத்தம் செய்யப்பட்டது..!


- அஹமட் சாஜித் -


நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ்தாக்கம் காரணமாக முழு நாடே ஸ்தம்பிதம் அடைந்து காரியாலயங்கள், பாடாசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச நிறுவனங்கள் போன்றன மூடப்பட்டு காரியாலய நடவடிக்கைகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததுடன் மூன்று மாதங்களாக பாடசாலைகள் முடக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள், கல்விசாரா ஊழியர்களின் நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.
இதனால் கல்முனை வலய காரைதீவு கோட்டத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி கமு/ அல் அஸ்ரப் மகா வித்தியாலயமும் சூழல் மாசடைந்து குப்பை கூழங்களால் சூழப்பட்டு மாசடைந்த நிலையில் காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் அவசரமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு கல்வி நடவடிக்கையைத் தொடரும் சூழல் அதிகமாகவுள்ளதால் பாடசாலையை சுத்தம் செய்ய வேண்டிய முக்கிய தேவை பாடசாலை சமூகத்திற்கும் மாவடிப்பள்ளி மக்களுக்கும் முக்கிய தேவையாக உள்ளது.
அதன் பிரகாரம் #எமது_பாடசாலையை_நாமே_சுத்தம்_செய்வோம் என்னும் கருப்பொருளுக்கமைய மாவடிப்பள்ளி கிழக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் AM. பஹ்மி, மேற்கு சமுர்த்தி உத்தியோகத்தர் ULM. அமீன் தலைமையில் சமுர்த்தி பயனாளிகளின் உதவியுடன் இன்று ( 02 ) செவ்வாய்க்கிழமை பாடசாலை சுற்றுப்புறச்சூழல் சுத்தம் செய்யும் நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவுப் பிரதேச சபை உறுப்பினர் M. ஜலீல், முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவுப் பிரதேச சபை உறுப்பினர் MNM. றனீஸ், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் போன்றோர் கலந்து தங்களது பங்களிப்புகளையும் வழங்கினர்.
எனவே எமது பாடசாலையை நாமே சுத்தம் செய்வோம் திட்டத்திற்கு உதவிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் அனைவருக்கும் மாவடிப்பள்ளி மக்கள் சார்பாகவும், பாடசாலை சமூகம் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் எதிர்காலத்திலும் இவ்வாறான உதவிகளையும் உங்களிடத்திலிருந்து எதிர்பார்க்கின்றோம் என பாடசாலையின் அதிபர்ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலயம் சமுர்த்தி சங்கங்களினால் சுத்தம் செய்யப்பட்டது..! மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலயம் சமுர்த்தி சங்கங்களினால் சுத்தம் செய்யப்பட்டது..! Reviewed by ADMIN on June 02, 2020 Rating: 5