கிண்ணியாவில் வெடிபொருள் வெடித்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு.


திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் அமைந்துள்ள பெரியாற்றுமுனை எனும் இடத்திலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படும் வெடிப்பொருளொன்று வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், பெரியாற்றுமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரே உயிரிழந்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு, படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கிண்ணியா வைத்தியசாலையின், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வெடிப்புச் சம்பவம் கவனயீனத்தின் காரணமாகவே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிண்ணியாவில் வெடிபொருள் வெடித்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு.  கிண்ணியாவில் வெடிபொருள் வெடித்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு. Reviewed by NEWS on June 10, 2020 Rating: 5