சொர்க்கத்துக்கு செலவதாக கூறி தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்ட சிறுமி!


கிரிபாவ, பொலேவெவ என்னும் பிரதேசத்தில் சொர்க்கத்துக்குச் செல்வதற்காக சிறுமி ஒருவர் தனது உடலுக்குத் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இதில் ஹனா துரயலாகே பவனி சத்ரசா குமாரி என்ற பத்து வயது சிறுமியே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


கல்கமுவ பதில் மாஜிஸ்திரேட் எச். எம். காஞ்சனா ஹதுருசிங்கவின் உத்தரவின் கீழ் கொழும்பு நகர திடீர் மரண விசாரணை நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையில்,


சிறுமியின் பாட்டியான கருணா புஷ்பலதா பிரேமதிலக்க (51) சாட்சியமளிக்கையில்,


“இறந்தவர் எனது பேத்தியாவார். அவரது தாய் தனது கணவரை விவகரத்து செய்து மறுமணம் செய்யவுள்ளார்.


அதனால் மகளின் குழந்தையான இவர் என்னுடனேயே வசித்து வந்தார். பிராமணர் ஒருவர் அவரது உடலுக்கு தீமூட்டி சொர்க்கத்துக்கு சென்றதாக செய்தியொன்றை கேட்ட எனது பேத்தியும் தனது உடலுக்கு தீ மூட்டிக் கொண்டதாக என்னிடம் தெரிவித்தார்” என சாட்சி தெரிவித்தார்.


எரிகாயங்கள் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் மரணம் நிகழ்ந்துள்ளதாக கொழும்பு நீதிமன்ற வைத்திய நிபுணர் எச். என். ருஹுல் ஹக் நீதிமன்ற வைத்திய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சொர்க்கத்துக்கு செலவதாக கூறி தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்ட சிறுமி!  சொர்க்கத்துக்கு செலவதாக கூறி தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்ட சிறுமி! Reviewed by NEWS on June 10, 2020 Rating: 5