பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து போதைப்பொருள் வர்த்தகம்.. இரு இளைஞர்கள் 5,600 போதைவில்லைகள் மற்றும் ஹெரொயினுடன் கைது.


கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருள் விற்பனையில்
ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய ஊழில் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5,600 போதைவில்லைகள், 2400 மில்லிகிராம் ஹெரொயின் ஆகியன  கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 20 மற்றும் 29 வயதான சந்தேக நபர்கள் இருவரும் வத்தளை மற்றும் கொனதுடுவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (26) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து போதைப்பொருள் வர்த்தகம்.. இரு இளைஞர்கள் 5,600 போதைவில்லைகள் மற்றும் ஹெரொயினுடன் கைது. பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து போதைப்பொருள் வர்த்தகம்.. இரு இளைஞர்கள் 5,600 போதைவில்லைகள் மற்றும் ஹெரொயினுடன் கைது. Reviewed by ADMIN on July 26, 2020 Rating: 5