உலகம் சுற்றுவது நின்றால் தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிற்போடப்படமாட்டாது


உலகம் சுற்றுவது நின்றால் தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிற்போடப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டார்.

ஏற்கனவே தேதி குறிக்கப்பட்ட பொதுத்தேர்தல் குறித்த தினத்தில் நடைபெறுமென அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஊடாக  கொரோனா தொற்று பரவி உள்ள நிலையில் தேர்தலை பிற்போடும் எவ்வித எண்ணமும் இல்லை என அவர் கூறினார்.

மேலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி
தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்குமாறு அவர் கட்சிகளிடம் கண்டிப்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார விதிமுறைகளை பேனாமல் கொரோனா பரவல் அதிகரித்தால் அரசியல் கட்சிகளே அதனை பொறுப்பேற்கவேண்டும் என அவர் மேலும் கூறினார்.
உலகம் சுற்றுவது நின்றால் தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிற்போடப்படமாட்டாது உலகம் சுற்றுவது நின்றால் தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிற்போடப்படமாட்டாது Reviewed by ADMIN on July 13, 2020 Rating: 5