ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் விடுமுறை அறிவிப்பு.


ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது மற்றும்  விடுமுறை அறிவிப்பது தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அறிவித்துள்ளது.

,இந்த விடயங்கள் தொடர்பில்  பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் விடுமுறை அறிவிப்பு. ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் விடுமுறை அறிவிப்பு. Reviewed by ADMIN on July 15, 2020 Rating: 5