தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிப்ன்ன- துனகதெனிய பிரதேசத்தில், இளைஞர்
ஒருவர் இரவு உறங்கச் சென்றபோது, அலைபேசியை சார்ஜரில் இணைத்துவிட்டு, ஹேன்ட்பிரியை காதில் மாட்டிக் கொண்டு உறங்கிய சந்தர்ப்பத்தில், திடீரென அலைபேசி வெடித்ததில், தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று ( 21) உயிரிழந்துள்ளாரென, தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிபென்ன- துனகதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதடைய இளைஞனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மொபைல் தொலைபேசி வெடித்து, தீக்காயங்களுக்கு உள்ளான இளைஞன் உயிரிழப்பு.
Reviewed by ADMIN
on
July 22, 2020
Rating:
