உயர்தரம் - புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து தீர்மானம்?


கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான திகதி நாளை அறிவிக்கப்படவுள்ளது.

பெரும்பான்மையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து கல்வி அமைச்சு, க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி குறித்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் காரணமான அழுத்தங்கள் மற்றும் மன தாக்கங்களால் திசைதிருப்பப்படும் மாணவர்களின் அணுகுமுறைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் கல்வி அமைச்சு மிகவும் அவதானமாகவும் உணர்வுபூர்வமானதாகவும் முடிவுகளை எடுக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தரம் - புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து தீர்மானம்? உயர்தரம் - புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து தீர்மானம்? Reviewed by ADMIN on July 19, 2020 Rating: 5