அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா- பலியானோர் எண்ணிக்கை உயர்வுஉலகளாவிய ரீதியாக கொவிட் - 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒருகோடியே 34 லட்சத்து 59 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்- 19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியாக பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 81 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பிரேசிலிலே அதிகளவான கொவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி அங்கு 1341 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் கொவிட்-19 காரணமாக பிரேசிலில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் 19 லட்சத்து 31 ஆயிரத்து 204 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்றுக்காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 928 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 143 பேராக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா- பலியானோர் எண்ணிக்கை உயர்வு அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா- பலியானோர் எண்ணிக்கை உயர்வு Reviewed by ADMIN on July 15, 2020 Rating: 5