போக்குவரத்து அமைச்சர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு..


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளினுள் மேற்கொள்ளப்படும் நடமாடும் விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்த கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்களுக்கு அமையவே மேற்படி தீர்மானத்தை அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு குறித்த விற்பனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் தொடக்கம் புகையிரதங்களில் நடமாடும் விற்பனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து அமைச்சர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு.. போக்குவரத்து அமைச்சர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு.. Reviewed by ADMIN on July 13, 2020 Rating: 5