மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகைமார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களுக்கு அரசாங்கத்தினால் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த மாதங்களுக்கான கட்டணமாக பெப்ரவரி மாதத்திற்குரிய மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு 02 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த காலப்பகுதிக்குள் மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாமென இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மார்ச் , ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருப்பின், அதற்குரிய பணத்தை மீள வழங்கவோ அல்லது எதிர்வரும் மாதங்களுக்குரிய மின்சாரப் பட்டியலில் குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை Reviewed by ADMIN on July 15, 2020 Rating: 5