ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் CID அதிரடி வேட்டை.


குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பெறவே, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் அங்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு, சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு அமையவே குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் CID அதிரடி வேட்டை. ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் CID அதிரடி வேட்டை. Reviewed by ADMIN on July 03, 2020 Rating: 5