சஹ்ரானின் சகாக்களுடன் தாக்குதலுக்கு முன்பே CIDக்கு தொடர்பு


சஹ்ரான் குழுவுக்கு ஆயுத பயிற்சி வழங்கியதாக நம்பப்படும் ஆமி மொஹைதீன் மற்றும் சஹ்ரானின் மைத்துனன் அன்சார் ஆகியோர் பற்றி ஏலவே அறிந்திருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவர்களை 'உளவாளிகளாக' பயன்படுத்த தொடர்பிலிருந்துள்ளமை குறித்து ஜனாதிபதி விசாரணைக் குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

பாசிக்குடா பகுதியில் ஆமி மொஹைதீன் ஆயுதங்கள் ஒளித்து வைத்து பயிற்சி வழங்கி வருவதாக கிடைத்த உளவுத் தகவலின் பின்னணியில் அங்கு சென்று குறித்த நபரை விசாரித்த ஓய்வு பெற்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் டயஸ் பத்மசிறி இதனை தெரிவித்துள்ளார்.

தான் நேரடியாக சென்று விசாரித்த போதிலும், அங்கு சந்தேகப்படும் அளவில் எதுவும் இருக்கவில்லையெனவும், சஹ்ரானைப் பிடிப்பதற்குத் தான் மொஹைதீனின் உதவியைப் பெற பேச்சுவார்த்தை நடாத்தி, தமது தொலைபேசி இலக்கங்களையும் கொடுத்ததாகவும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டே காத்தான்குடி பொலிசார் ஆமி மொஹைதீனை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பெற்றிருந்தும் குறித்த நபரை சி.ஐ.டியினர் கைது செய்யாது விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சஹ்ரானின் சகாக்களுடன் தாக்குதலுக்கு முன்பே CIDக்கு தொடர்பு  சஹ்ரானின் சகாக்களுடன் தாக்குதலுக்கு முன்பே CIDக்கு தொடர்பு Reviewed by ADMIN on July 24, 2020 Rating: 5