இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை என்றுகூறிய, மங்களவிடம் பொலிஸார் விசாரணை


இலங்கை சிங்களபௌத்த நாடில்லை என தெரிவித்தமை குறித்து முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீரவை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

மாத்தறையில் சுமார் இரண்டு மணிநேரம் மங்களசமரவீரவை அவரது கருத்து குறித்து பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்

மங்களசமரவீர வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றவேளை அவருடன் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கியதேசிய கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சிலரும் சென்றுள்ளனர்.

ஒரு நோக்கத்திற்காக இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து கொண்டமைஇதுவே முதல்தடவை என மாத்தறை அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் மங்களசமரவீரதெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செகான்சேமசிங்க செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை என்றுகூறிய, மங்களவிடம் பொலிஸார் விசாரணை இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை என்றுகூறிய, மங்களவிடம் பொலிஸார் விசாரணை Reviewed by ADMIN on September 14, 2020 Rating: 5