சிறிகொத்தவில் இருந்து கோபத்துடன் வெளியேறினார் நவீன் ?


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, கட்சியின் தலைமையகமாகிய சிறிகொத்தவில் உள்ள தனது அலுவலகத்தை மீளக் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைமையகத்திற்கு நேற்று மாலை சென்ற அவர் அங்கிருந்த தனது அலுவலகத்திலுள்ள காகிதாதிகளை அகற்றியிருக்கின்ற அதேவேளை, பொறுப்புக்கள், சொத்துக்களை தலைமை நிர்வாகிகளிடம் கையளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் என்கிற அறிவிப்பை வெளியிட்ட முதலாவது உறுப்பினராக நவீன் திஸாநாயக்க இருக்கின்றார்.

எனினும் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவாகியதை அடுத்து நவீன் திஸாநாயக்க சற்று சங்கடமடைந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் கட்சியின் தலைமையகத்தில் நடத்திவந்த அலுவலகத்திலிருந்து கோபத்துடன் வெளியேறிவிட்டதாகவும் சிறிகொத்த தகவல்கள் கூறுகின்றன.
சிறிகொத்தவில் இருந்து கோபத்துடன் வெளியேறினார் நவீன் ? சிறிகொத்தவில் இருந்து கோபத்துடன் வெளியேறினார் நவீன் ? Reviewed by ADMIN on September 16, 2020 Rating: 5