கல்முனை மாநகர சபையின் அவசர அறிவிப்பு.


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரஸ்தலங்களுக்குமான நடப்பு ஆண்டுக்குரிய வர்த்தக அனுமதிப் பத்திரத்தை (Trade Licence) எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு மாநகர சபை உத்தரவிட்டுள்ளது.

இக்காலப்பகுதிக்குள் மாநகர சபையிடமிருந்து வர்த்தக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளத் தவறும் வியாபாரஸ்தலங்களின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் தண்டப்பணமும் அறவிடப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான காலம் மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள போதிலும் கொரோனா தொற்று அபாய சூழ்நிலை காரணமாக வர்த்தகர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.
கல்முனை மாநகர சபையின் அவசர அறிவிப்பு. கல்முனை மாநகர சபையின் அவசர அறிவிப்பு. Reviewed by ADMIN on September 15, 2020 Rating: 5