நாடாளுமன்றத்துக்கு சென்ற எம்.பியால் கொரோனா அச்சம்


காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சம்பத் அத்துகோரள, பலப்பிட்டிய பிரதேசத்தில் மரண வீடொன்றுக்கு சென்று, நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த மரண வீட்டுக்குச் சென்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பத் அத்துகோரள எம்.பி மாத்திரம் தனிமைப்படுத்தலுக்குச் செல்லாமல், நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்துள்ளதாகவும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில், சுகாதார பிரிவினரின் கவனத்துக்குக் கொண்டு வருவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு சென்ற எம்.பியால் கொரோனா அச்சம்    நாடாளுமன்றத்துக்கு சென்ற எம்.பியால் கொரோனா அச்சம் Reviewed by ADMIN on October 22, 2020 Rating: 5