மதுஷ் கொல்லப்பட்டதன் மர்மம் என்ன? ஜேவியின் விஜித ஹேரத் வெளியிட்ட அதிர்சி தகவல்போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளியில் வருவதை தடுப்பதற்காகவே பிரபல பாதாள உலக குற்றவாளி மகந்துரே மதுஷ் கொல்லப்பட்டார் என ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.

ஜேவியின் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

மதுஷின் வழக்குகள் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டால் அவர் பல அரசியல்வாதிகள் குறித்த இரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் காணப்பட்டன என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் வெளியாவதை தடுப்பதற்காகவே அவர் கொல்லப்பட்டார் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கொலை இடம்பெறுவது இது முதல் தடவையில்லை. இதற்கு முன்னரும் இவ்வாறான கொலைகள் இடம்பெற்றுள்ளன. மதுஷ் கொல்லப்பட்ட விதமே பிரச்சினைக்குரியது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரில் மதுஷ் பல அரசியல்வாதிகளுக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடர்புள்ளது எனத் தெரிவித்திருந்தார் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 80 அரசியல்வாதிகளுக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புள்ளது என்பதை மதுஷ் தெரிவித்திருந்தார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டிருந்ததையும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுஷ் கொல்லப்பட்டதன் மர்மம் என்ன? ஜேவியின் விஜித ஹேரத் வெளியிட்ட அதிர்சி தகவல் மதுஷ் கொல்லப்பட்டதன் மர்மம் என்ன? ஜேவியின் விஜித ஹேரத் வெளியிட்ட அதிர்சி தகவல் Reviewed by NEWS on October 21, 2020 Rating: 5