ஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்? நாடாளுமன்றில் நீதியமைச்சர் அதிரடி.


சமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிற்கு நீதியமைச்சர் பதிலளித்துள்ளார்.

சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்? நாடாளுமன்றில் நீதியமைச்சர் அதிரடி. ஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்? நாடாளுமன்றில் நீதியமைச்சர் அதிரடி. Reviewed by ADMIN on November 28, 2020 Rating: 5