இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பானுக்கு உள்நுழையத் தடைஇலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஜப்பானுக்குச் செல்ல இன்று(14) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கொவிட் 19 பரவலையடுத்து அந்நாட்டு தேசிய கொள்கைத் திட்டங்களில் மாற்றம் மேற்கொள்ளும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை, தாய்லாந்து, தாய்வான், ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தென் கொரியா, சீனா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஜப்பானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஜப்பானில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில் 4 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பானுக்கு உள்நுழையத் தடை இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பானுக்கு உள்நுழையத் தடை Reviewed by ADMIN on January 14, 2021 Rating: 5