எதிர்கட்சி தலைவர் நிஸார் முஹம்மதுக்கு கன்னத்தில் அரைந்த இந்திக ருக்ஷான் - மிஹிந்தலைமிஹிந்தல பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரை எதிர்கட்சி உறுப்பினரொருவர் கன்னத்தில் அரைந்தமை சர்சையை உண்டாக்கியுள்ளது.
இன்றைய (19) பிரதேச சபை கூட்டத்திலேயே மேற்க்கண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பிரதேச சபை கூட்டத்திற்கு வந்திருந்த வேலையில் எதிர்கட்சி தலைவர் இருக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர் இந்திக ருக்ஷன் அமர்ந்திருந்தார்.
அப்போது ஏற்பட்ட குழப்ப நிலையில் இருக்கையை விட்டு எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் எதிர்க்கட்சி தலைவர் நிஸார் முகம்மதுக்கு கன்னத்தில் அரைந்தார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கைத்தொலைபேசியில் வீடியோ செய்திருந்தார்.
மிஹிந்தலை பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் சமகி ஜன பலவேகய கட்சியையும், உறுப்பினர் இந்திக ருக்ஷான் ஐக்கிய தேசிய கட்சியையும் சேர்ந்தவராவார்.
ஐ.தே.க உறுப்பினர் இந்திக ருக்ஷான் தற்போது பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.எதிர்கட்சி தலைவர் நிஸார் முஹம்மதுக்கு கன்னத்தில் அரைந்த இந்திக ருக்ஷான் - மிஹிந்தலை எதிர்கட்சி தலைவர் நிஸார் முஹம்மதுக்கு கன்னத்தில் அரைந்த இந்திக ருக்ஷான் - மிஹிந்தலை Reviewed by ADMIN on January 19, 2021 Rating: 5