கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது மனைவி கொரோனா தொற்றால் இன்று (22) உயிரிழந்துள்ளார் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை (15) மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவரது கும்பத்தில் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், உயிரிழந்த நபரின் மனைவி, இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த பகுதியான அரசடி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் இதுவரை 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு குடும்பத்தில் இரு கொரோனா மரணங்கள்
Reviewed by ADMIN
on
January 22, 2021
Rating:
