கொவிட் தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

 


கொவிட் தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி புதிதாக 28 கைதிகளுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் ஆண் கைதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது


மேலும் 127 கைதிகள் மாத்திரம் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு கொவிட் தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு Reviewed by NEWS on February 22, 2021 Rating: 5