புதிய பயணத்திற்கு தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு

 சுற்றுலா துறை நாட்டிற்கு மிக முக்கியம் என்பதால் சவால்களை எதிர் கொண்டு, இந்தத் துறையில் புதிய பயணத்திற்கு தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


அதன்படி ,சுற்றுலா துறையின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.


கொரோனா தடுப்பூசியை வழங்கும் போது ஹோட்டல் ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


சுற்றுலாப் பயணிகள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படாத நிலையில், வசதிகளை பெற்றுக் கொடுப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென இதன்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


மேலும் ,COVID காலத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் ஒரு வீதத்தினரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பயணத்திற்கு தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு புதிய பயணத்திற்கு தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு Reviewed by NEWS on February 18, 2021 Rating: 5