தெஹிவலையில் ஹோட்டல்கள் சுற்றி வலைப்பு.

 

தெஹிவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட வர்த்தக நிலையங்கள், உணவகங்களில், நுகர்வோருக்கு பாவனைக்கு தகுதியற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும்,குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.


இதன்படி, 20ற்கும் மேற்பட்ட இடங்களுக்கு இறுதி அறிவிப்பு அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


இந்த பரிசோதனைகளின் போது, கண்டுபிடிக்கப்பட்ட பாவனைக்கு உதவாத பெருமளவிலான பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சில உணவகங்களில் உணவு சமைக்கும் இடம் சுத்தமாக இருக்கவில்லை என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


அதேவேளை, சமைக்கும் இடங்களிலேயே கழிவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. தெஹிவலையில் ஹோட்டல்கள் சுற்றி வலைப்பு. தெஹிவலையில் ஹோட்டல்கள் சுற்றி வலைப்பு. Reviewed by NEWS on February 23, 2021 Rating: 5