21 ஆம் திகதியின் பின்னர் நாட்டை திறக்க முடியுமா?


 எதிர்வரும் 21 ஆம் திகதியின் பின்னர் நாட்டை திறப்பதா என்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ள PCR பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


தனிமைப்படுத்தல் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். 


தற்போது தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு 10 நாட்களின் பின்னர் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் 14 நாட்களின் பின்னர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


எதிர்வரும் நாட்களில் எழுமாறான பிசிஆர் பரிசோதனைகள் ஊடாக நாட்டின் நிலமையை அவதானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

21 ஆம் திகதியின் பின்னர் நாட்டை திறக்க முடியுமா? 21 ஆம் திகதியின் பின்னர் நாட்டை திறக்க முடியுமா? Reviewed by ADMIN on June 17, 2021 Rating: 5