ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி
பயணக் கட்டுப்பாடு அமுல் உள்ள காலப் பகுதியில் மக்களின் பொது வாழ்க்கையைத் தொடர அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது குறித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பில் அடிப்படை பொருட்கள் மற்றும் 10 சேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவற்றில் துறைமுகங்கள், பெற்றோலிய தயாரிப்புக்கள், சுங்கம் மற்றும் ரயில்வே திணைக்களம் போக்குவரத்து முதலான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தவிர, அனைத்து மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட நிருவாக பிரிவுகள், மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து காப்புறுதி சேவைகளும், கூட்டுறவு சதோச போன்ற மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களை வழங்கும் தொடர்புடைய நிறுவனங்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பில் உள்ளடகப்பட்டுள்ளன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி Reviewed by ADMIN on June 18, 2021 Rating: 5