ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.


முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48வது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.


இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்டிருந்தது.


இந்த தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த வாய்மூல அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட்டினால் நாளை ஆரம்பமாகவுள்ள கூட்டத்தொடரில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அது தொடர்பான உறுப்பு நாடுகளின் விவாதமானது எதிர்வரும் செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் ஐநா மனித உரிமைகள் பேரவையின்  48 ஆவது கூட்டத்தொடர் நாளை  ஆரம்பம் Reviewed by ADMIN on September 12, 2021 Rating: 5