கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக விலை அதிகரிக்கும்...

 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


இதன்படி ,பல பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இறக்குமதியாளர்கள் தங்கள் விலையை தற்போது அதிகரிப்பார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இருப்பினும் , கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பே சில பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதை சகோதர ஊடகம் வெளிக்கொண்டுவந்துள்ளது.


முன்பு 250,000 – 275,000 வரை இருந்த சில கைத்தொலைபேசிகளின் விலை இப்போது 350,000 ஐ தாண்டியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த பொருட்களின் விலையை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று நிதி அமைச்சகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.


அதற்கமைய ,டொலரின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக விலை அதிகரிக்கும்... கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக விலை அதிகரிக்கும்... Reviewed by ADMIN on September 11, 2021 Rating: 5