நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் – பசில்..!

நாட்டில் எந்தவகையிலும் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் உற்பத்தி பொருளாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பாக விவசாய அமைச்சர் மற்றும் அதனுடன் இணைந்த இராஜாங்க அமைச்சுகளுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உணவுப் பற்றாக்குறையுடன் பஞ்சம் ஏற்படும் என்று சிலர் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர் என அவர் தெரிவித் துள்ளார்.

அவர்கள் எதிர்பார்ப்பதைப் போல் நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாம் இம்முறை வரவு – செலவு திட்டத்தில் உற்பத்திப் பொருளா தாரத்தை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை வரவு – செலவுத் திட்டத்தில் கிராமத்துக்குப் பணம் அனுப்பும் முறையை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித் துள்ளார்.

உற்பத்தித் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இம்முறை வரவு – செலவு திட்டத்தில் கிராம மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் – பசில்..! நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் – பசில்..! Reviewed by ADMIN on October 13, 2021 Rating: 5