ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறுவோரின் சிவில் உரிமையை இரத்து செய்வது தொடர்பில் ஜனாதிபதி கருத்து
ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறுவோரின் சிவில் உரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயர் தொழில்நுட்பத்துடன் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘கல்யாணி பொன் நுழைவாயிலை’ நேற்று (24) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டு வந்து அதனை நிறைவேற்ற தயார் எனவும் அவர் கூறுகின்றார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என கடந்த அரசாங்கத்தினாலேயே நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறுவோரின் சிவில் உரிமையை இரத்து செய்வது தொடர்பில் ஜனாதிபதி கருத்து   ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறுவோரின் சிவில் உரிமையை இரத்து செய்வது தொடர்பில் ஜனாதிபதி கருத்து Reviewed by ADMIN on November 25, 2021 Rating: 5