பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு

 
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


கண்டியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர்  இதனை கூறியுள்ளார்.


மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் மேல் மாகாணத்தில் இருந்து இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்வும் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் இதனையடுத்து கட்டண அளவீட்டு கருவி இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு Reviewed by ADMIN on November 21, 2021 Rating: 5