உயிர் போகும் முன்னர் சூத்திரதாரி யார் என்பதை அம்பலப்படுத்துவேன்...

 
சில காரணங்களை அம்பல்படுத்த வேண்டியுள்ளது. இம்முறை போகும் போது பாரிய ஆபத்தான நிலையொன்று ஏற்பட்டுள்ளது“ எனத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக சேறு பூசப்பட்டது. அதனால் தான் தனக்கு கொழும்புக்குச் செல்ல நேரிட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களுக்கு பதுளையில் இருந்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்றார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தன் மீது முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களால் தனது பிள்ளைக்கு பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இன்று என்ன நடந்தது. இந்த நாட்டுக்கு பாரிய சாபம் ஒன்று ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.


மேலும் ,தன்னை எப்படியாவது உள்ளே தள்ளிவிட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், “நான் இன்று கூறுகிறேன். இந்த தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அதை தான் நிரூபிப்பேன். தனது மூச்சு நிற்கும் முன்னர் அதனை செய்வேன்“ என்றார்

உயிர் போகும் முன்னர் சூத்திரதாரி யார் என்பதை அம்பலப்படுத்துவேன்... உயிர் போகும் முன்னர் சூத்திரதாரி யார் என்பதை அம்பலப்படுத்துவேன்... Reviewed by ADMIN on November 23, 2021 Rating: 5